T20 உலகக்கோப்பை 2024: கிரிக்கெட் தொடரில் இணைந்த ‘யுவராஜ் சிங்’: ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் ஜூன் 1ம் தேதி முதல் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கிறது. மேலும் இந்த தொடர் அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தூதர்களாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் மற்றும் ஓட்டப்பந்தய ஜாம்பவான் உசைன் போல்ட் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் ஒருவரை தூதராக நியமிக்கப்பட்டதாக ICC முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், 2011ல் உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த யுவராஜ் சிங்கும் நடக்க இருக்கும் T20 உலக கோப்பை தொடருக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய யுவராஜ் சிங், ” 20 ஓவர் உலக கோப்பை இதுவரை நடந்ததை விட பெரிதாக அமைய இருக்கிறது. பங்கு வகிப்பது உற்சாகமளிக்கிறது. மேலும் கிரிக்கெட் வளர்ச்சியில் பங்கு வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.