வாம்பயர் பேஷியல் செய்த பெண்களுக்கு HIV தொற்று உறுதி: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் தங்கள் சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இதனால் அழகு சாதன கடைகளுக்கு சென்று அழகுக்காக பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி சோசியல் மீடியாவில் பல முக சிகிச்சைகள் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இதன் மூலம் சில ஆபத்துக்களும் ஏற்படும் என்று பெண்கள் புரிந்து கொள்வதில்லை. அந்த வகையில் தற்போது பேசியல் செய்யும் பெண்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக ஒரு ஷாக்கிங் நியூஸ் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது, வாம்பயர் ஃபேஷியலை செய்து கொண்ட சில பெண்களுக்கு எச்ஐவி தொற்று உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாம்பயர் பேஷியல் என்பது பெண்ணின் முகத்தில் உள்ள ரத்தத்தை எடுத்த பிறகு அதில் இருக்கும் பிளாஸ்மாவை தனியாக பிரித்து எடுத்து, அந்த பிளாஸ்மாவை மீண்டும் முகத்தின் தோலில் சிறிய ஊசி மூலம் செலுத்தப்படுவது தான் இந்த பேஷியல். இதன் மூலம் முகம் இளமையான தோற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்த சிகிச்சை மேற்கொண்ட சிலருக்கு தான் எச்ஐவி இருப்பதை தெரிய வந்துள்ளது. மொத்தம் 5 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று DOH தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த ஃபேஷியல்களுக்கு FDA அங்கீகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.