தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்: தமிழகம் முழுவதும் கோடை காலம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வெப்பத்தில் இருந்து மக்களை தற்காத்து கொள்ள அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தமிழகமெங்கும் இலவச குடிநீர் முகாம்கள் அமைத்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இந்திய வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இன்று முதல் மே 2ம் தேதி வரை வெப்ப அலை வீசும். எனவே இன்று 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், நாமக்கல், கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், ஈரோடு, அரியலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.