ஊட்டி குன்னூரில் உள்ள பிரபல ஹோட்டலில் தக்காளி சாஸில் இருந்த புழுக்கள்: தமிழ் சினிமாவில் அட்டகத்தி, பிகில் உள்ளிட்ட படங்களில் துணை வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் விஜய் விஸ்வா. சென்னையை சேர்ந்த இவர் தனது நண்பர் குடும்பத்தினர் உள்பட 10 பேருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
ஊட்டி குன்னூரில் உள்ள பிரபல ஹோட்டலில் தக்காளி சாஸில் இருந்த புழுக்கள்
இதனை தொடர்ந்து நேற்று மதியம் குன்னூரில் இருக்கும் , ‘180 டிகிரி மெக்கைவர் வில்லா’ என்ற ஹோட்டலில் விஜய் , பிரைட் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த டொமேட்டோ சாஜை ஊற்றி சாப்பிட்ட சில நொடிகளில் அவருக்கு உமட்ட தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த டொமேட்டோ சாஜை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது டொமேட்டோ தக்காளி சாஸில் புழுக்கள் வட்டமிட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதை அங்கு வேலை பார்த்த ஊழியர்களிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல் போய் மேனேஜ்மென்ட் கிட்ட போய் கேளுங்க என்று கூறியுள்ளனர். உடனே அவர் மேனேஜ்மென்ட் இடம் புகார் தெரிவித்த நிலையில், அந்த தக்காளி சாஸ் இங்கே தயார் செய்தது கிடையாது,, வெளியே கடையில் இருந்து வாங்கியது என்று கூறி மன்னிப்பு கேட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.