மீண்டும் விற்பனைக்கு வரும் Nokia 3210 மொபைல் போன்: HMD நிறுவனம் இந்தியா உட்பட பல்வேறு சந்தைகளில் தனது சொந்த பிராண்டட் போன்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக மக்களை கவரும் நோக்கத்தில் புது புது அட்வான்ஸ் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட HMD pulse, HMD pulse + மற்றும் HMD pulse pro போன்ற மொபைல் குறித்து தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற Nokia Nokia 3210 மொபைல் போன் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளதாக HMD நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது கடந்த 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Nokia 3210 மொபைல் போன் உலக முழுவதும் உள்ள பயனர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. குறிப்பாக அந்த சமயத்தில் இந்த மொபைல் போன் இல்லாத ஆட்களை பார்க்க முடியாது என்று கூட சொல்லலாம். அப்போதே இந்த மொபைல் போன் இந்திய சந்தையில் ரூ 2999 விற்பனையானது.
மீண்டும் விற்பனைக்கு வரும் Nokia 3210 மொபைல் போன்
இந்நிலையில் 25 வருடத்திற்கு பிறகு இந்த மொபைல் போனில் 4ஜி, ப்ளூடூத் மற்றும் அனைவருக்கும் பிடித்த ஸ்னேக் கேம் போன்ற நவீன வசதிகளுடன் இடம்பெறுகிறது. இந்த மொபைல் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.