உழைப்பாளர்  தினத்தன்று நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு எச்சரிக்கை!!உழைப்பாளர்  தினத்தன்று நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - தமிழக அரசு எச்சரிக்கை!!

உழைப்பாளர்  தினத்தன்று நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: தமிழகத்தில் கிட்டத்தட்ட 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றனர். அந்த கடைகளில் இருந்து வருடத்திற்கு மொத்தம் 44,098.56 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டது. இன்னும் சில கடைகளை மூட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது டாஸ்மாக் நிர்வாகம் தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளது.

IPL 2024: ஆரஞ்சு தொப்பி லிஸ்ட்டில் இடம்பிடித்த 5 வீரர்கள் – முதலிடத்தில் இருக்கும் வீரர் யார் தெரியுமா?

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” நாளை உழைப்பாளிகளின் உன்னதத்தை உணர்த்தும் விதமாக மே 1ம் தேதி உழைப்பாளர் தினம் வருடந்தோரும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மக்களுக்கு எந்த ஒரு இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக் கடை மற்றும் தனியார் பார்கள் திறக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *