
டி20 உலகக் கோப்பை 2024: இந்திய அணி வீரர்கள் லிஸ்ட் இன்று அறிவிப்பு: தற்போது ஐபிஎல் சீசன் 18 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற மே 23ம் தேதியுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் T20 உலக கோப்பை போட்டி ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் கிட்டத்தட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன. அதுமட்டுமின்றி நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் விளையாட இருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இதனை தொடர்ந்து நேற்று கேன் வில்லியம்சன் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அறிவித்திருந்தது. இந்நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக அகமதாபாத்தில் நடக்க இருக்கும் கூட்டத்தில் வீடியோ காணொலி மூலம் கேப்டன் ரோகித் சர்மா கலந்து கொண்டு வீரர்களை அறிவிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி அணியில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் வருகிற மே 25ஆம் தேதி வரை மாற்றி கொள்ளலாம் என ஐசிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.