
ஊட்டி கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை அறிவிப்பு. தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் வரும் மே மாதம் முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை செயல் படுத்துமாறு நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஊட்டி கொடைக்கானல் செல்ல இ-பாஸ் நடைமுறை அறிவிப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இ-பாஸ் நடைமுறை அறிவிப்பு :
ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில் கொரோன காலத்தில் இ-பாஸ் வழங்கியது போல சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறை தலைமை செயலாளர் வழிகாட்டுதலின் அடிப்படையில் வருவாய் துறை உதவியுடன் சுற்றுலா துறை, வனத்துறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி கட்டணம் 2024 ! மிதி படகு முதல் ஷிகாரா படகு வரை ஒரு மணி நேரத்திற்கான விவரங்கள் !
மேலும் இ-பாஸ் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளின் அடிப்படை தகவல்களை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை, செல்லும் வாகனத்தின் விவரம் மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றின் முழு விவரமும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கும் இ-பாஸ்ஸில் குறிப்பிடப்பட்டிருக்கும்.