பாஜக எம் பி வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத் காலமானார் - பொது விடுமுறை அறிவித்த கர்நாடக அரசு!பாஜக எம் பி வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத் காலமானார் - பொது விடுமுறை அறிவித்த கர்நாடக அரசு!

பாஜக எம் பி வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத் காலமானார்: கர்நாடக மாநில பாஜக எம் பி-யும், முன்னாள் மத்திய அமைச்சராக விளங்கியவர் தான் வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத். இவர் கடந்த 1980-ம் ஆண்டில் ஜனதா கட்சி உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி காங்கிரஸ் கட்சியில் இருந்தார். இதையடுத்து ஐக்கிய ஜனதா தளம் சென்ற அவர் கொஞ்ச காலத்திலே மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டில், சித்தராமையா அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்ட பின்னர் பாஜக கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக  உடல்நலக் குறைவு காரணமாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் கிட்டத்தட்ட 50 வருடம் அரசியல் வாழ்க்கைக்கு இன்று அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்று பலரும் புகழாரம் பாடி வருகின்றனர்.

கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மேலும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் மட்டும் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *