நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி அங்கு படிக்கும் மாணவிகளை அவர் தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக குற்றச் சாட்டு எழுந்தது. எனவே இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி நிர்மலாதேவியை கைது செய்தனர்.
நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
அதுமட்டுமின்றி இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்த நிலையில், நேற்று நிர்மலா தேவி தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதுமட்டுமின்றி முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் நிர்மலா தேவிக்கான தண்டனை குறித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. அந்த வகையில் தற்போது நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதன்படி நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2,42,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை தொடர்ந்து மதுரை மத்திய சிறைக்கு நிர்மலா தேவி அழைத்து செல்லப்பட இருக்கிறார்.