சுப்ரீம் கோர்ட்டில் இன்று முதல் புதிய இணையதளம்: தற்போதைய காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் டிஜிட்டல் சேவை வந்துவிட்டது. அந்த வகையில் தற்போது நீதிமன்றத்திலும் டிஜிட்டல் சேவை வந்துள்ளது. அதாவது நீதிமன்றத்தின் சேவைகள் மக்களுக்கு மக்களுக்கு எளிதாகவும், வேகமாகவும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் செயல்பட்டு வந்துள்ளார். அதன்படி நீதிமன்றத்தை டிஜிட்டல்மயமாக்கும் சேவையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக மத்திய அரசு 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே இந்த நிதியின் மூலம் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் https://www.sci.gov.in என்ற இணையதள ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் இன்று முதல் தொடங்கும் நிலையில், இந்த வெப்சைட்டை பயன்படுத்தி மக்கள் நீதிமன்றத்தில் தற்போது எந்த வழக்கு போய் கொண்டிருக்கிறது,என்ன நடக்கிறது என்று பார்த்து கொள்ளலாம். விரைவில் அனைத்து நீதிமன்றங்களிலும் இந்த டிஜிட்டல் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.