தமிழ்நாடு மாவட்ட நீதிமன்ற தேர்வு பாடத்திட்டம் 2024 tamilnadu district court exam syllabus 2024தமிழ்நாடு மாவட்ட நீதிமன்ற தேர்வு பாடத்திட்டம் 2024 tamilnadu district court exam syllabus 2024

தமிழ்நாடு மாவட்ட நீதிமன்ற தேர்வு பாடத்திட்டம் 2024. கடந்த 28ஆம் தேதி வெளிவந்த மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு செல் வெளியிட்டுள்ள தமிழகத்தில் உள்ள அணைத்து நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வின் பாடத்திட்டம் என்ன என்பதை விரிவாக கீழே காணலாம்.

விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு 2 பிரிவுகளாக நடத்தப்படும். முதல் பிரிவு பொதுவான எழுத்துத் தேர்வு மற்றும் இரண்டாம் பிரிவு வாய்மொழி தேர்வு (VIVA-VOCE) ஆகும். மேலும் தேவைப்பட்டு பதவிகளுக்கு, செய்முறைத் தேர்வு இருக்கும்.

முதல் பிரிவாக எழுத்து தேர்வு நடத்தப்படும். இத்தேர்வின் நாள், நேரம், விபரம் வரும் நாட்களில் அறிவிக்கப்பட்டும். தேர்வுக்கான பாடத்திட்டம், மதிப்பெண் அளவீடு, மற்றும் இதர விபரங்கள் குறித்த பார்க்கலாம்.

எழுத்து தேர்வு, செய்முறைத்தேர்வு, வாய்மொழித்தேர்வு அனைத்தும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு இருக்கும்.

நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை
நிறைவேற்றுனர்/ கட்டளை பணியாளர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர் போன்ற பதவிகளுக்கு

எழுத்து தேர்வு – 170 மதிப்பெண்கள்

வாய்மொழித்தேர்வு – 30 மதிப்பெண்கள்

ஓட்டுநர் , நகல் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர், தூய்மைப் பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர்/ இரவு காவலர், வாட்டர்மென்/வாட்டர்வுமன், மசால்ஜி உள்ளிட்ட பணிகளுக்கு,

எழுத்து தேர்வு – 100 மதிப்பெண்கள்

செய்முறைத்தேர்வு – 70 மதிப்பெண்கள்

வாய்மொழித்தேர்வு – 30 மதிப்பெண்கள்

வீதம் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும்.

BECIL 35000 சம்பளத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

170 மதிப்பெண்களுக்கான பொது எழுத்து தேர்வு பாடத்திட்டம் –

பொதுத்தமிழ் – 50 மதிப்பெண்கள் – 10ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்.

பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு – 120 மதிப்பெண்கள்

இதன் பாடத்திட்டம், நடப்பு நிகழ்வுகள், பொது அறிவியல், வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய அரசியலமைப்பு, சுருக்குதல், மீப்பெரு பொது காரணி & மீச்சிறு பொது மடங்கு (HCF & LCM), விழுக்காடு, விகிதம் & விகிதாச்சாரம், தனி வட்டி, கூட்டு வட்டி, பரப்பு, கொள்ளளவு, காலம் & வேலை, தர்க்க காரணவியல் & எண் வரிசை அனைத்தும் 10ஆம் வகுப்புவரை உள்ள தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்.

தேர்வு நேரம் – 3 மணி நேரம்

பொது தமிழ் – 50 மதிப்பெண்கள், (8ஆம் வகுப்பு வரி உள்ள பொதுத்தமிழ் தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்)

பொது அறிவு – 50 மதிப்பெண்கள்

நடப்பு நிகழ்வுகள், அடிப்படை கணித திறன் & வீட்டு பராமரிப்பு முறைகள், சுகாதாரம், உணவு தயாரிப்பு & பரிமாறுதல், தோட்டக்கலை உபகரணங்களை கையாளுதல் & பராமரிப்பு, செய்யும் முறைகள், நீர் பராமரிப்பு & பாதுகாப்பு, வீடு & அலுவலகம் பராமரிக்கும் அடிப்படை கொள்கைகள்.

இந்த பொது தேர்வில் மாற்று திறனாளிகள் மட்டும் பொது தமிழிற்கு பதிலாக பொது ஆங்கிலம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ( 10ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு வரை உள்ள பொதுஆங்கிலம் தமிழ்நாடு அரசு பாடத்திட்டம்).

குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள்:

பொது தமிழ் (50) – 20 மதிப்பெண்கள்

பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு (120) – 48 மதிப்பெண்கள்

பொது அறிவு (50) – 20 மதிப்பெண்கள்.

எழுத்து தேர்வில் அடிப்படை தேர்ச்சி பெற்ற நபர்கள் செய்முறைத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள்.

தேர்வு விபரங்கள்Download

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *