Home » சினிமா » “மேதகு” பட இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்  – சோகத்தில்  திரையுலகம்!

“மேதகு” பட இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்  – சோகத்தில்  திரையுலகம்!

இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்  - சோகத்தில்  திரையுலகம்!

இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்: கேப்டன் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மேதகு. இந்த படத்தில் இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் தான் பிரவீன் குமார்(28). அடுத்து தொடர்ந்து ஒரு சில படங்களில் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். அதாவது மஞ்சள் காமாலை இருப்பது தெரிஞ்சும் அதை சரிவர கவனிக்காததால் இந்த நோய் இறுதி ஸ்டேஜ்க்கு சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவரின் இறுதி சடங்கு இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது வீட்டில் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அவருடைய உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட இருக்கிறது. இந்த சிறிய வயதில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொண்ட கொலம்பியா அரசு- அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவிப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top