மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 2 லட்சம் பேர் இணைப்பு: தமிழக அரசு பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கடந்த வருடம் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி விண்ணப்பிக்கவே முடியாமல் போனவர்கள் பட்டியல் சில லட்சங்களும் உள்ளன. இதனை தொடர்ந்து இந்த திட்டத்தில் இணைய முக்கிய அங்கமாக ரேஷன் கார்டுகள் இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
ஆனால் கடந்த சில மாதங்களாக புதிய ரேஷன் கார்டுகள் தருவதை அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருவதால் மேற்கொண்டு தள்ளி செல்கிறது . அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து ஜூன் 2வது வாரம் முதல் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் தொடங்கும் என்று கூறுகின்றனர். இதனை தொடர்ந்து புதிதாக இணைவோர் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக 2 லட்சம் பேர் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.