தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள். தமிழ்நாட்டின் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றான தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில். இது மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இத்திருக்கோவில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும். அந்தவகையில் இந்து சமய அறநிலையத்துறையால் தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பு பணிகள்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பொய் செய்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் :
இந்நிலையில் சாமி சன்னதியின் பின்புறத்தில் உள்ள தரைத்தளம் மேடு பள்ளங்களுடன் சேதமடைந்து காணப்படுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்கு சிரமமாக இருப்பதால் தரைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் சில பேர் பெருவுடையார் திருக்கோவிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்திகளை வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஐக்கிய அமீரகத்தில் நேற்று கனமழை – இன்று சர்வதேச விமான சேவைகள் ரத்து – வெளியான முக்கிய அறிவிப்பு!!
மேலும் இத்திருக்கோவிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இந்திய தொல்லியல் துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையின் மீது அவதூறு பரப்பும் வகையில் காணொளி காட்சி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.