சோனியா காந்தி வெற்றி பெற்ற “ரேபரேலி” தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி
சோனியா காந்தி வெற்றி பெற்ற “ரேபரேலி” தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி: மக்களவை தேர்தல் பணிகள் நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்த தேர்தலின் முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி வெளியிட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி சார்பாக கடந்த 2004-ம் ஆண்டு முதல் அமேதியில் எம்.பி.யாக இருந்து வந்தார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அந்த தொகுதியில் தோல்வி அடைந்தார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட போவதாக காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ ராகுல் காந்தியின் தாயாரான சோனியா காந்தி உ.பி.யின் ரேபரேலியில் கடந்த 2004 முதல் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது இந்த தொகுதியில் ராகுல் காந்தி நிற்கிறார். அதற்கு காரணம் சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது தான். எனவே அம்மா வெற்றி பெற்ற தொகுதியில் மகன் வெற்றி பெருகிறாரா என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கலாம்.