சதுரகிரி செல்ல மே 5 முதல் 8 ஆம் தேதி வரை அனுமதி ! பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு - முழு தகவல் இதோ !சதுரகிரி செல்ல மே 5 முதல் 8 ஆம் தேதி வரை அனுமதி ! பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு - முழு தகவல் இதோ !

சதுரகிரி செல்ல மே 5 முதல் 8 ஆம் தேதி வரை அனுமதி. சிவன் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக இருப்பது சதுரகிரி மகாலிங்கம் கோவில். மேலும் இந்த மலைக்கோவிலானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த வகையில் இக்கோயிலுக்கு செல்வதற்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சதுரகிரி மலைக்கோவிலில் மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் என ஐந்து வகையான கோவில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட மே 5 (ஞாயிற்று கிழமை) முதல் மே 8 ஆம் தேதி வரை ஆகிய நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது – மறைந்தும் மக்களுக்கு உணவை வாரி வழங்கும் வள்ளல்!!

மேலும் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்க அனுமதி கிடையாது, அத்துடன் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *