சிக்கன் ரைசில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்த பேரன். நாமக்கல் மாவட்டம் தேவராயபுரத்தை சேர்ந்தவர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (வயது 20). இவர் கடந்த 30ஆம் தேதி நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி சென்றுள்ளார். அத்துடன் வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40) மற்றும் தாத்தா சண்முகம் (வயது 67) உள்பட குடும்பத்தினருக்கு சிக்கன் ரைசை கொடுத்துள்ளார். அதை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்ட நிலையில் நதியா மற்றும் சண்முகத்திற்கு மட்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இதனையடுத்து இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதன் அடிப்படையில் இருவர் சாப்பிட்ட சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை சேகரித்து போலீசார் சேலத்தில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
சிக்கன் ரைசில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்த பேரன் :
இதனை தொடர்ந்து சிக்கன் ரைஸ் வாங்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம் மற்றும் சிக்கன் ரைசை வாங்கி வந்த பகவதி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நடத்தப்பட்ட இந்த விசாரணையில் சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) கலந்துகொடுத்ததை பகவதி ஒப்புக்கொண்டார்.
ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பெண் உயிரிழப்பு – வளைகாப்புக்கு போகும் நடந்த கொடூரம்!
மேலும் கல்லூரி மாணவரான பகவதிக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை தாத்தா சண்முகம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பேரன் பகவதி சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து தாத்தா சண்முகத்தை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பகவதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.