12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது? – பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. 23 – 24 ஆம் கல்வியாண்டுக்கான பொது தேர்வில் கிட்டத்தட்ட 7.80 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை உள்ளிட்டவை அடங்கும். அதுமட்டுமின்றி இந்த தேர்வில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 6 ம் தேதி வெளியாகும் என முன்னரே பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது. ஆனால் தற்போது மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இதனால் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளி போகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி வரும் 6 ஆம் தேதி (06.05.2024) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் எப்போது எதில் வெளியாகும் என்பது குறித்த இணையதள முகவரிகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.