பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகம். இந்தியன் இரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் சுற்றுலாப்பயணிகளுக்காக ண்ணிய தலங்களுக்கு சென்று வர பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் இதில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள் உள்பட 14 பெட்டிகளைகொண்டுள்ளது. மேலும் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டலம் சார்பில் நெல்லையில் இருந்து புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் :
அந்த வகையில் இந்த பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் நெல்லையில் இருந்து தொடங்கி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, திரிவேணி சங்கமம் (பிரயாக்ராஜ்), கயா மற்றும் அயோத்யா கிய புண்ணிய தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இந்த ரயில் பயணமானது மொத்தம் 9 நாட்களுக்கான சுற்றுப்பயணமாகும். அத்துடன் அடுத்த மாதம் 6ஆம் தேதி இந்த சுற்றுலா ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
பயணக்கட்டணம் :
மேலும் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலில் பயணம் ஒரு நபருக்கு ரூ.18,550 கட்டணமாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரெயிலில் பயணித்தால் எல்.டி.சி. சான்றிதழ்களை பெறலாம்.
உதகை மலர் கண்காட்சி 2024 ! பார்வையாளர் கட்டணத்தை நிர்ணயம் செய்த மாவட்ட நிர்வாகம் – பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் வரை கட்டணம் எவ்வளவு தெரியுமா ?
இதன் அடிப்படையில் மேலும் தகவல்களுக்கு www.irctctourism.com என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என இந்தியன் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.