அரண்மனை 4 திரை விமர்சனம். சுந்தர் சி தங்கை தமன்னா. குடும்பத்தின் எதிர்ப்பை மீறி பிரதாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கிராமத்தில் உள்ள பழைய அரண்மனை ஒன்றில் குடியேறினார். ஒருநாள் வெளியே செல்லும் பிரதாப்பை அமானுஷ்ய சக்தி ஒன்று கொன்றுவிடுகிறது. பின்னர் பிரதாப் ரூபத்தில் அரண்மனைக்குள் நுழைந்து விடுகிறது.
அரண்மனை 4 திரை விமர்சனம்
அது தமன்னாவின் குழந்தைகளை கொல்ல முயற்சி செய்கிறது. குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் தமன்னா கொல்லப்படுகிறார். தங்கை மற்றும் அவரது கணவர் இறப்பின் ரகசியத்தை கண்டறிய சுந்தர் சி வருகிறார். இந்த நிலையில் இது தொடர்பான சிலரும் தொடர்ந்து கொள்ளப்படுகின்றனர். பின்னர் அந்த அமானுஷ்ய சக்தியை சுந்தர் சி அழித்தார் என்பதுதான் மீத கதை.
Good Bad Ugly படத்தின் நியூ அப்டேட் ! படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு – கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் !
இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்த தமன்னாவின் நடிப்பு சுமாராக இருந்தது. ராசி கண்ணா குறைவான காட்சியில் வந்தாலும் நிறைவான நடிப்பை வழங்கினார். நகைச்சுவையில் யோகி பாபு, கோவை சரளா, வி.டிவி கணேஷ் கூட்டணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.சிம்ரன் மற்றும் குஷ்பூ தோன்றும் பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது.
ஒரு அரண்மனை, சில மர்மங்கள், இருள், மற்றும் திகில் போன்ற அனைத்தும் படத்தில் இருந்தது. ஆனால் திகிலிற்கு ஏற்ற திரைக்கதை இல்லை. திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் பேயிடம் இருந்து தமன்னா குழந்தைகளை காப்பாற்றுவது இருக்கட்டும் இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்பது போல் படம் இருந்தது என்று விமர்சித்தனர்.