ஊட்டி சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு Happy நியூஸ்
ஊட்டி சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு Happy நியூஸ்: தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் உட்பட பல இடங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டதால் வழக்கத்தை விட அதிகமான வெயில் வெளுத்து வாங்கும்.இதனால் மக்கள் தங்களின் சூட்டை தணிக்க கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு கோடை விடுமுறையை கொண்டாட செல்கின்றனர். இந்நிலையில் ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பியான நியூஸ் வெளியாகியுள்ளது. அதாவது, கோவை புதிய பேருந்து நிலையம் மற்றும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயங்கும் பேருந்துகளை விட கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து உதகைக்கு ஐந்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து இயக்கப்படும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் கோடை காலத்தை கழிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்காக குறைந்த கட்டணத்தில் சுற்றுலா தளங்களை சுற்றி பார்க்க பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரியவர்களுக்கு 100 ரூபாய் மற்றும் சிறுவர்களுக்கு 50 ரூபாய் என கட்டணத்தை செலுத்தி பயண அட்டை பெற்று சுற்று பேருந்துகளில் பயணிக்கலாம். மேலும் இந்த சுற்றுலா பேருந்து ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கி தண்டர் வேர்ல்ட், படகு இல்லம் வழியாக சென்று தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட பகுதிகளை கடந்து பெஞ்ச் மார்க் டி மியூசியம், ரோஜா பூங்கா போன்ற வழித்தடங்களில் சுற்று பேருந்துகள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.