கடலோர மாவட்டங்களுக்கு ஆபத்து: தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பத்தின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்து தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS), தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்திய வாலை மையம் ஆகியவை சேர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதாவது காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா மற்றும் மும்பை உள்ளிட்ட கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் கடலின் சீற்றம் அதிகமாக இருக்கும். அதன்படி கடல் அலை 0.5 மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலை உயரும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
எனவே திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் அலை சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை, காஞ்சிபுரம் (செங்கல்பட்டு) மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள கடல் பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரித்துள்ளது.