மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த தேர்தலில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே பி கே ஜெயக்குமார் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார்.
மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரம் செய்த ஜெயக்குமாரை காணவில்லை என்று அவருடைய மகன் கருத்தையா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மாயமான காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அதாவது உபரி அருகே இருக்கும் ஒரு தோட்டத்தில் அவரின் உடல் எரிந்த நிலையில் இருந்துள்ளது. இதையடுத்து அவரது உடலை காவல்துறை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக நெல்லை எஸ் பி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஜெயக்குமார் எழுதிய கடிதம் ஒன்று காவல்துறையிடம் சிக்கியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த கடிதத்தில், ‘திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. எனவே அவர்களால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. குறிப்பாக நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தான் தனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் ஜெயக்குமாரின் இந்த கடிதம் இதுவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாராக எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கடலோர மாவட்டங்களுக்கு ஆபத்து – “கள்ளக்கடல்” மூலம் பல மீட்டர் உயரும் கடல் அலை – மீனவர்களுக்கு எச்சரிக்கை!!
சமீபத்திய செய்திகள்
அமித்ஷாவை எதிர்த்து போட்டியிட்ட 16 பேர் வேட்பு மனு வாபஸ்
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்