அக்னி நட்சத்திர வெயில் மண்டைய பொளக்கிறதா: தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் இந்த வெயிலில் இருந்து எப்படி தப்பிப்பது என்று மக்கள் பலரும் யோசித்து கொண்டிருக்கிறார்கள். கோடை வெயிலுக்கே மக்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் இருந்து வரும் நிலையில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது. அப்படியென்றால் இனி வரும் நாட்களில் வெப்ப நிலையின் அளவு நம்மளால் யூகிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்து வரும். இதனால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அக்னி நட்சத்திரம் போது நாம் என்னவெல்லாம் செய்ய கூடாது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Whatsappயை பின் தொடருங்கள்!
அக்னி நட்சத்திர வெயில் மண்டைய பொளக்கிறதா?
- வீட்டை விட்டு வெளியே வர கூடாது. குறிப்பாக மதிய வேளைகளில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
- வெயிலில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
- வெயில் நேரங்களில் வெளியூர் செல்வது நல்லது இல்லை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது சிறப்பு, அப்படி போக வேண்டும் என்றால் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் செல்லலாம்.
- நார் ஆடைகளை அணிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி குளிர்ச்சியான ஆடைகளை அணிவது நல்லது.
- நன்றாக உறங்க வேண்டும். போதுமான தூக்கம் உடலின் வெப்பநிலையை சீராக வைக்க உதவும்.
- உணவுகளை விட தண்ணீர் ஆதாரங்களை அதிகமாக எடுத்து கொள்ளுங்கள், குறிப்பாக இளநீர், மோர் உள்ளிட்ட வைகளை எடுத்து கொண்டால் நல்லது.
- இஞ்சி, புதினா, தயிர் மற்றும் எலுமிச்சை உணவுகளில் அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.
- எண்ணெய் சேர்க்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தோசைக்கு பதிலாக இட்லி சாப்பிட்டால் நல்லது.
மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு – கடைசியாக அவர் எழுதிய பரபரப்பு கடிதம்?
மேலே சொல்லப்பட்டவைகளை நாம் கடைபிடித்தால் போதும், அக்னி நட்சத்திரம் வெயில் நேரத்தில் நம்மை காத்து கொள்ளலாம்.