
விஜய் சேதுபதி புதிதாக தொடங்கிய ஓடிடி நிருவனம்: இப்போது இருக்கும் காலகட்டத்தில் தியேட்டரில் வெளியாகும் புதிய படங்கள் மூன்று வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனால் தியேட்டர் உரிமையாளர் பாதிப்படைகிறார்கள் என்று தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் வீட்டில் வைத்து குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு நெட்பிளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி நிறுவனங்கள் வாரம் வாரம் நிறைய படங்களை வெளியிட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து பல ஹிட் படங்களை எடுத்த இயக்குனர் சீனு ராமசாமி ஒன் பிளஸ் என்ற ஓடிடி தளத்தை புதிதாக தொடங்கியுள்ளார். இந்த ஓடிடி தளத்திற்கு மாதத்திற்கு வெறும் 29 ரூபாய் கட்டினால் கிட்டத்தட்ட 800 படங்களை பார்த்து கொள்ளலாம். ஆனால் விஜய் சேதுபதிக்கும் இயக்குனர் சீனு ராமசாமிக்கு அலாதி நட்பு இருப்பதால், அவரது பெயரில் விஜய் சேதுபதி தான் இந்த ஓடிடி நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது. இதில் சைலன்ட் பார்ட்னராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.