குக் வித் கோமாளி சீசன் 5வில் அதிரடியாக மாற்றப்பட்ட பிரபலம்? வந்த சூட்டிலேயே அனுப்பிட்டாய்ங்களே?குக் வித் கோமாளி சீசன் 5வில் அதிரடியாக மாற்றப்பட்ட பிரபலம்? வந்த சூட்டிலேயே அனுப்பிட்டாய்ங்களே?

குக் வித் கோமாளி சீசன் 5வில் அதிரடியாக மாற்றப்பட்ட பிரபலம்: விஜய் டிவியில் தற்போது டிஆர்பியை முதலிடத்தில் இருந்து வரும் ஷோ என்றால் அது குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் 5வது சீசன் தொடங்கி தற்போது சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத அளவுக்கு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த ஷோவுக்கு தூணாக திகழ்ந்து வந்த நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தான். இந்த காம்போவுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

ஆனால் இந்த சீசனில் வெங்கடேஷ் பட் விலகியதால் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இந்த ஷோவில் இருந்து அந்நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மேன்சன்ஸ் நிறுவனம் வெளியேறிய நிலையில், அதற்கு பதிலாக பாக்ஸ் ஆபிஸ் என்ற நிறுவனம்  தயாரித்து வருகிறது. இதனால் நடப்பாண்டு சீசனில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஷோ ஆரம்பித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் ஒரு கோமாளி ஷோவை விட்டு விலகியுள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 5வில் அதிரடியாக மாற்றப்பட்ட பிரபலம்?

அது வேற யாரும் இல்லை kpy நாஞ்சில் விஜயன் தான். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால்  பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் தயாரிக்கும் எந்த ஷோவிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நாஞ்சில் விஜயனுக்கு பதிலாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புது கோமாளியாக நடிகை ஃபரீனா அசாத் களமிறங்கி உள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 2024 வெளியீடு – முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *