
ஆஸ்திரேலியா எம்.பி பிரிட்டானி லாகாவுக்கு பாலியல் துன்புறுத்தல் : ஆஸ்திரேலியாவில் இருக்கும் முக்கிய பகுதியான குயீன்ஸ்லாந்து என்ற இடத்தில் உள்ள யெப்பூன் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரிட்டானி லாகா (37). தற்போது அவர் அந்த நாட்டில் சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர் வெளியே சென்றபோது சில அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி தாக்கிய நபர்கள் பிரிட்டானி லாகாவுக்கு போதைமருந்து கொடுத்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்த நிலையில் அவரிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மயக்கத்தில் இருந்து எழுந்த அவர் உடனே காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன் பின்னர் மருத்துவமனையில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பிரிட்டானி லாகா வெளியிட்டுள்ள பதிவில், ” எனக்கு நடந்தது போன்று யாருக்கும் நடந்திருக்கலாம். போதைப்பொருள் அல்லது தாக்குதல் சம்பவங்கள் இல்லாத சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.ஆஸ்திரேலியா எம்.பி பிரிட்டானி லாகாவுக்கு பாலியல் துன்புறுத்தல்