வங்கி ஊழியர்களின் வேலை நாட்கள் - இனி சனி, ஞாயிற்று கிழமை வேலை இல்லை? விரைவில் அமலாகும் சூப்பர் சட்டம்!வங்கி ஊழியர்களின் வேலை நாட்கள் - இனி சனி, ஞாயிற்று கிழமை வேலை இல்லை? விரைவில் அமலாகும் சூப்பர் சட்டம்!

வங்கி ஊழியர்களின் வேலை நாட்கள்: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். அதில் முக்கியமான கோரிக்கை என்னவென்றால் தற்போது வங்கியில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில்  விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இனிமேல் 5 நாட்கள் மட்டுமே பணி நாளாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வங்கிகள் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) மற்றும் ஊழியர் சங்கங்கள் இடையே ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்நிலையில் பணியாளர்கள் கோரிக்கை வைத்தது படி, வங்கி ஊழியர்களின் வாரத்தில் 5 நாள் வேலை பார்க்கும் திட்டம் விரைவில் அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால், ஜூலை மாதத்திற்கு பின்னர் இந்த குறைக்கப்பட்ட வேலை நாட்கள் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும். மேலும் காலை 9.30 மணி  தொடங்கி மாலை 5.30 மணி  பணி நேரமாக அறிவிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி வங்கிகள் சங்கங்கள் 2015ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.  

டைட்டானிக் பட கப்பலின் கேப்டன் பெர்னார்ட் ஹில் காலமானார் – அதிர்ச்சியில் மிதந்த ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *