நாங்குநேரி சாதி வெறி தாக்குதலுக்கு ஆளான சின்னத்துரை +2 மதிப்பெண் பட்டியல்: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த தம்பதியினர் தான் முனியாண்டி – அம்பிகாபதி. அவர்களுடைய மகன் தான் சின்னத்துரை (17) என்பவர். கடந்த ஆண்டு ஒரு கும்பல் அத்துமீறி அவர்களது வீட்டிற்குள் நுழைந்து சின்னத்துரை சரமாரியாக கத்தியால் தாக்கி தப்பி ஓடியது. இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த இளைஞனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல்வாதி முதல் சினிமா பிரபலங்கள் வரை கண்டனம் தெரிவித்து வந்தனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

மேலும் சாதிய வன்மத்தால் இன தாக்குதல் நடைபெற்றதாக கூறி சின்னத்துரையுடன் கூட படித்த சக மாணவன் தெரிவித்தார். மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளான சின்னத் துரையின் 12ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வை மருத்துவமனையில் வைத்தே எழுதினார். இதை தொடர்ந்து அவர் ஆறு மாதம் பள்ளிக்கு செல்ல வில்லை. வீட்டில் இருந்த படியே விடா முயற்சியுடன் படித்து வந்தார். இந்நிலையில் இன்று 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சின்னத்துரை 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். சின்னத்திரைக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவருடைய மார்க் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.