
நீட் வினாத்தாள் கசிவு 2024: இளநிலை மருத்துவ படிப்புக்கு நுழைய மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்ட தேர்வு தான் நீட். இந்த தேர்வால் பல மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் வருடந்தோறும் அரங்கேறி வரும் இந்த தேர்வில் பல்வேறு முறைகேடுகளும் மோசடிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த நடப்பாண்டு நீர் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அந்த வகையில், பீகாரில் நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ராஜஸ்தானில் ரூ20 லட்சத்துக்கு நீட் வினாத்தாளை விற்கப்பட்டு இணையத்தில் கசிய விட்டு தேர்வு எழுத வைத்திருக்கின்றனர். இதையடுத்து மும்பையில் நீட் தேர்வு நடைபெற்ற போது ஆள் மாறாட்டமே நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது மாதிரியான நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இதுவரை 50 பேர் மொத்தம் பிடிபட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு 2024