Home » செய்திகள் » சென்னையில் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி படுகாயம் ! மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும், ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !

சென்னையில் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி படுகாயம் ! மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும், ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !

சென்னையில் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி படுகாயம் ! மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும், ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு !

சென்னையில் நாய்கள் கடித்து 5 வயது சிறுமி படுகாயம். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாடல் பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தனது இரண்டு நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார். அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை புகழேந்தியுடைய இரண்டு நாய்களும் கடித்துள்ளன. இந்நிலையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் சோனியா குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன. இதனையடுத்து நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விஷயத்தில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மற்றும் அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 23 வகை நாய்களில், ராட்வீலர் வகையும் ஒன்றாகும். அந்த வகையில் எந்த உரிமமும் இன்றி ராட்வீலர் வகை நாயை வளர்த்து வந்துள்ளனர். இந்த நாய்களின் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கடலில் மூழ்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி –  வானிலை எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் நடந்த விபரீதம்!!

நாம் வளர்க்கும் எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசென்ஸ் கட்டாயமாக பெற வேண்டும். நாய்களுக்கு அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்க வேண்டும். நாய்கள் கடிதத்தில் படுகாயம் அடைந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் சிறுமியின் மருத்துவச் செலவுகள் அனைத்தும் சென்னை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top