12ம் வகுப்பு தேர்வு முடிவு மறுமதிப்பீடு 2024: தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. எனவே நடந்து முடிந்த பொதுத் தேர்வில் மாணவர்களை விட மாணவியர் அதிக அளவில் தேர்ச்சி (4.07%) அடைந்துள்ளனர். மேலும் இந்த தேர்வில் கிட்டத்தட்ட 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய நிலையில், 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு படத்திலும் 100 சதவீதம் மார்க் எடுத்த மாணவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி தமிழில் 35 பேரும், ஆங்கிலத்தில் 7 பேரும், கணிதத்தில் 2057 பேரும், வேதியியலில் 471 பேரும் , இயற்பியலில் 633 பேரும், தாவரவியலில் 90 பேரும், உயிரியலில் 652 பேரும், விலங்கியலில் 382 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளை மறுகூட்டல் செய்ய விரும்பினால் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி விடைத்தாளின் நகலை பெறவும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் வருகிற மே 9ம் தேதி வரை மதிப்பெண் பட்டியலை https://www.dge.tn.gov.in/ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் எழுதிய தேர்வு மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று அரசு இயக்கம் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வு முடிவு மறுமதிப்பீடு 2024