சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயண தேதி ஒத்திவைக்கப்பட்டது – பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயண தேதி ஒத்திவைக்கப்பட்டது: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஒருவர் தான் சுனிதா வில்லியம்ஸ்(58). இவர் நாசாவில் கடந்த 1998ம் ஆண்டு இணைந்தார். அதன்பிறகு பல்வேறு ஆய்வுகளை செய்து வந்தார். இதையடுத்து அவர் விண்வெளி பயணம் மேற்கொண்டார். அதன்படி கடந்த 2006ம் ஆண்டு முதல் பயணமும், 2021ம் ஆண்டு இரண்டாம் பயணமும் அவருக்கு வெற்றிகரமாக அமைந்தது. அதுமட்டுமின்றி விண்வெளியில் 322 நாட்கள் அங்கேயே தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் மூன்றாவது முறையாக விண்வெளி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

மேலும் அவருக்கு துணையாக  புல்ச் வில்மோர் மற்றும் ஸ்டார்லைனர் வில்லியம்ஸ் ஆகியோர் செல்ல இருந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் செல்வதற்காக இன்று ஸ்டார்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான விண்கலம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ்  குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தயாராக இருந்த போதிலும் கடைசி நேரத்தில் ஆக்ஸிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயண தேதி ஒத்திவைக்கப்பட்டது

தமிழகத்திற்கு ஒரே சமயத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Leave a Comment