கோவிட் தடுப்பூசியை திரும்ப பெற்ற அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்: கடந்த சில வருடங்களாக உலகையே ஆட்டி படைத்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர பல ஆராய்ச்சி வல்லுநர்கள் சேர்ந்து கொரோனா தடுப்பூசியை கண்டு பிடித்தனர். அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸில் இருந்து மக்கள் மீண்டு வந்தனர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிட் ஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் வருவதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனமா COVID-19 தடுப்பூசியை உலகளவில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் சேர்ந்து உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, கோவிஷீல்டாக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து COVID-19 க்கான இப்பொழுது புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசி உருவாக்கப்பட்டதால், வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறுதல் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இனி தடுப்பூசியை தயாரிப்பதாக இல்லை என்று கூறி அஸ்ட்ராஜெனெகா தானாக முன்வந்து அதன் சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.கோவிட் தடுப்பூசியை திரும்ப பெற்ற அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்