சீனாவில் 10 வருட கோமாவில் இருந்த கணவனை மீட்ட மனைவி: தற்போதைய காலகட்டத்தில் கணவன் மனைவி ஏற்படும் பல்வேறு கருத்து வேறுபாடு காரணமாக பாசப்பிணைப்பு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இருக்கையில் சீனாவை சேர்ந்த ஒருவர் கோமாவுக்கு சென்ற நிலையில் அவருடைய மனைவியால் நினைவு திரும்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் அவருக்கு சுய நினைவுக்கு வரவில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் அவரது மனைவி சன்ஹாங்சியா மற்றும் குடும்பத்தினர் வேதனையில் இருந்தனர். பல வருடங்கள் அவருடைய சுய நினைவு திரும்பாமல் இருந்து வந்த போதிலும் தொடர்ந்து தனது கணவனை அன்பாக பார்த்துக் கொண்டார். சொல்லப்போனால் தன் கணவர் மீண்டு வருவார் என அவருடைய மனைவி நினைத்தது சில நாட்களுக்கு முன்னர் பலித்துள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில், கோமாவில் இருந்து எழுந்த கணவனிடம் இவ்வளவு நாள் அவர் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி கூறியுள்ளார். அப்போது கணவனின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. சீனாவில் 10 வருட கோமாவில் இருந்த கணவனை மீட்ட மனைவி