ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம்: பிரபல விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நேற்று திடீரென விடுமுறை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாடு ம்,முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஊழியர்களுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சமரசம் பேசியும் வேலைக்கு ஆகாத நிலையில் இரண்டாவது நாளான இன்றும் ஊழியர்கள் விடுமுறை எடுத்து கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இன்று சென்னையில் இருந்து கொல்கத்தா, திருவனந்தபுரம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இருந்த எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வேலைக்கு வராமல் விடுமுறை எடுத்து கொண்ட சுமார் 25 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம்