10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 2024 நாளை வெளியீடு? தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி அரசு இணையதளத்தில் வெளியானது. இதில் 94 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து நடந்து முடிந்த 2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது என்று மாணவர்கள் பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 08 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 9 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தற்போது தான் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஓய்ந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 10ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ என்ற இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 2024 நாளை வெளியீடு?