
அட்சய திருதியை 2024 தங்கத்திற்கு மாற்று தேர்வுகள். இந்த ஆண்டு அட்சய திருதியை நாளை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினத்தில் தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா. அதான் இல்லை. லட்சுமி தேவிக்கு உகந்த எந்த பொருட்களை வேண்டுமானாலும் வாங்கலாம். அம்பாளுக்கு பிடித்த அந்த பொருட்களை அன்று வாங்கினாலே நம் வீட்டில் லட்சுமி கடாட்சியம் பொங்கும். அந்த பொருட்கள் எவை. வாங்க பாக்கலாம்.
அட்சய திருதியை 2024 தங்கத்திற்கு மாற்று தேர்வுகள்
தானியங்கள்:
பார்லி , வெண் கடுகு, அதாவது மஞ்சள் நிற கடுகு, போன்ற தானியங்களால் லட்சுமி தேவியை வழிபட உபயோகிக்கின்றனர். எனவே, இத்தகைய பொருட்களை நாளை வாங்குவது நல்லது. வளத்தின் அடையாளமாக திகழும் பருப்பு வகைகள், அரிசி, போன்ற தானியங்கள், செழிப்பு மற்றும் சுகாதாரத்தின் அடையாளமான காய்கறிகள், தீபத்தை ஏற்றும் நெய் போன்றவற்றையும் வாங்கலாம்.
சோழி:
அட்சய திருதியை அன்று சோழி வாங்கலாம். லட்சுமி தேவியை பூஜை செய்யும்போது சோழிகளை காணிக்கையாக செலுத்தி பிரார்த்தனை செய்யலாம். மறுநாள் அந்த சோழிகளை ஒரு சிவப்பு நிற துணியில் வைத்து கட்டி பணம் வைத்து எடுக்கும் இடத்தில வைக்கலாம். அதன் மூலம் நமது பண கஷ்டம் தீர்ந்து முன்னேற்றம் அடைவோம்.
மண்பானை:
நாளை வீட்டில் மண்பானை வாங்குவது லட்சுமி தேவியை மகிழ்விக்கும் என கூறப்படுகிறது. அதனால் மண் பானை வாங்குவது வீட்டில் சந்தோஷத்தையும், வளர்ச்சியையும் கூட்டும் என்ற கருத்தும் சொல்ல படுகிறது.
சிவனை வழிபாடும் போது நாம் செய்யக்கூடாதவை
சங்கு:
நாளைய தினத்தில் சங்கு வாங்கி அதை விஷ்ணு கடவுளுக்கு வைத்து பூஜை செய்யலாம். இப்படி செய்வதால் விஷ்ணுவும், லட்சுமி தேவியும் மனம் இறங்கி நாம் கேட்பதை தருவார்கள். வீட்டில் சந்தோசம் பொங்கும்.
ஸ்ரீசக்கரம்:
நாளை ஸ்ரீசக்கரம் வரைபடம் வாங்கலாம். அதனை, வீட்டின் பூஜை அறையில் வைக்கலாம். இதன் மூலம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் தெய்வீக இருப்பிடம் நமது வீட்டில் தங்கும் என்று ஐதீகம்.
எனவே, தங்கம் ,வெள்ளி போன்ற பொருட்கள் வாங்க தேவை இல்லை. இம்மாதிரி பொருட்களை வாங்கி வழிபட்டு அட்சய திருதியை கொண்டாடலாம்.