தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்கு தடை: தமிழகத்தில் தொடர்ந்து தெரு நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சற்று பீதியில் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு 23 வெளிநாட்டு கலப்பு நாய்களுக்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த 6ம் தேதி சென்னையில் உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு தாக்கியதில் இந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல் தொடர்ந்து சில இடங்களில் நடைபெற்று வருகிறது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள 23 வகை நாய்களை தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
- பிட் புல் டெரியர்
- கன்கல்
- சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக்
- தோசா இனு
- அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர்
- பிலா ப்ரேசிலேரியா
- அகிதா மேஸ்டிப்
- ராட்வீலர்ஸ்
- போயர் போயல்
- டோகா அர்ஜென்டினா
- அமெரிக்கன் புல் டாக்
- காக்கேஷியன் ஷெபர்டு டாக்
- சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக்
- டோன் ஜாக்
- சர்ப்ளேனினேக்
- ஜாப்னிஸ் தோசா
- கேனரியோ அக்பாஸ் டாக்
- மாஸ்கோ கார்ட் டாக்
- உல்ப் டாக்
- கேன் கோர்சோ
- பேண்டாக்
- டெரியர்
- ரொடீசியன் ரிட்ஜ்பேக்
வேலூர் மாவட்டத்தில் மே 14ல் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அதுமட்டுமின்றி மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த நாய் இனங்களின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கு மற்றும் இனப்பெருக்கம் செய்வதற்கு, குறிப்பாக வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாய்களுக்கு கருத்தடை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.