10ம் வகுப்புக்கான துணைத்தேர்வு அட்டவணை 2024: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் 97.4 % தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் நடந்து முடிந்த இந்த தேர்வில் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில், தற்போது 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 94.53 சதவீத மாணவிகளும் 88.58 சதவீத மாணவர்களும் சேர்த்து மொத்தம் 2023-24 கல்வி ஆண்டுக்கான 10 வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான துணை தேர்வு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக நடத்தப்படும் துணைத் தேர்வு வருகிற ஜூலை 2 முதல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான கால அட்டவணை நாளை வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி விடைத்தாள் நகல் வருகிற மே 15ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ITI Admission 2024: ஐடிஐ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – எப்படி தெரியுமா?
10ம் வகுப்புக்கான துணைத்தேர்வு அட்டவணை 2024 – நாளை வெளியீடு