IPL 2024 Impact Player Rule நீடிக்குமா: நடப்பாண்டு ஐபிஎல் சீசன் 6 கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சீசனில் பிசிசிஐ பல புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்று தான் இம்பாக்ட் பிளேயர் விதி. இந்த விதியின் மூலம் விளையாடி கொண்டிருக்கும் லெவன் அணியில் உள்ள தங்கள் வீரர்களில் ஒருவரை அணிகள் மாற்றலாம். மேலும் ஐந்து வீரர்களில் ஒரு இம்பாக்ட் பிளேயர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஆனால் இந்த விதி சில வீரர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக T20 உலக கோப்பை போட்டியின் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இம்பாக்ட் பிளேயர் விதியில் பெரிதும் உடன்பாடில்லை என்று சமீபத்தில் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இம்பாக்ட் பிளேயர் வீதி குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, இந்த ஆண்டு IPL சீசனில் இம்பாக்ட் பிளேயர் விதி ஒரு சோதனை முயற்சியாக கொண்டு வரப்பட்டது தான். நிரந்தரமாக கிடையாது. மேலும் இந்த விதியால் ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்த விதி குறித்து எந்த ஒரு அணியும் கருத்துக்கள் தெரிவிக்கவில்லை. மேலும் ஒளிபரப்பு உரிமம் பெற்றவர்கள் என அனைவரிடத்திலும் கலந்தாய்வு செய்த பின்னரே இந்த விதி நீடிக்குமா என்று முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இன்ஜினியரிங் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு 2024 ஜூன் 6 முதல் தொடக்கம் – அண்ணா பல்கலை. வெளியிட்ட அறிவிப்பு!
IPL 2024 Impact Player Rule நீடிக்குமா