11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2024 ! வரும் 13 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2024 ! வரும் 13 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பித்துக்கொள்ளலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !

11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2024. தமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வரும் 13 ஆம் தேதி முதல் மேற்படிப்பில் சேரும் வகையில் 11 ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை வரும் 13 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் விரும்பிய துறையை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு 2024 ஜூன் 6 முதல் தொடக்கம் – அண்ணா பல்கலை. வெளியிட்ட அறிவிப்பு!

அத்துடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை கொண்டு மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஏற்ற பாடப்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *