Pet Dog License 2024: இனி செல்லப்பிராணிகளுக்கு வருடந்தோறும் உரிமம் கட்டாயம்: சென்னையில் சில நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமியை ராட்வீலர் என்ற இனத்தை சேர்ந்த வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மத்திய அரசு 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இனப்பெருக்கம் செய்வதற்கு, வளர்ப்பு பிராணிகளாக விற்பனைக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” செல்ல பிராணிகளை வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும். தவறினால் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் உரிமம் பெற https://www.chennaicorporation.gov.in/ இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.