தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தற்போது தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கி கத்திரி வெயிலின் தாக்கத்தால் மக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :
தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் வழக்கு ! ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
அந்த வகையில் நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், செங்கல்பட்டு , காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.