சவுக்கு சங்கரை பேட்டியெடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.
காவல்துறையினரை கடுமையாக விமர்சனம் செய்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில்,யூடியூப் சேனலில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் வைத்து தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுக்கு சங்கரை பேட்டியெடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு கைது :
கடந்த சில நாட்களுக்கு முன் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து கடுமையாக விமர்சித்து கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் மீது கோவையை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார்.
அந்த பெண் காவல் அதிகாரியின் புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த மே 4ஆம் தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். மேலும் அவர்மீது கஞ்சா வழக்கும் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து சவுக்கு சங்கர் வழக்கில் தன்னையும் காவல்துறை கைது செய்யகூடும்என்ற காரணத்திற்காக தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளை ! கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு !
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இந்த மனு மீது விசாரணை செய்து ஒருவாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் டெல்லியில் தலைமறைவாய் இருந்த ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனல் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு தமிழக காவல் துறை கைதுசெய்துள்ளது.
மேலும் அவர் தமிழ்நாட்டிற்க்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.