11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியீடு. தமிழ்நாட்டில் மே மாதம் 6 ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியீடு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அந்த வகையில் மார்ச் மாதம் நடந்து முடிந்த 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி (செவ்வாய்கிழமை) வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுத அவர்கள் பயின்ற பள்ளிகளில் மே 16 ஆம் தேதி முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
சவுக்கு சங்கரை பேட்டியெடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது ! டெல்லியில் வைத்து கைது செய்த தமிழக காவல்துறை !
மேலும் தனித் தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள கல்வி சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.