CSK vs RR Live சென்னை அணிக்கு 142 ரன்கள் டார்கெட். சென்னை சிதம்பரம் மைதானத்தில் 61வது போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஒப்பனராக களம் இறங்கினர். பவர் பிள்ளையில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தனர்.
CSK vs RR Live சென்னை அணிக்கு 142 ரன்கள் டார்கெட்
புள்ளி பட்டியலில் 2ஆம் இடம் இருக்கும் RR இன்று சற்று தடுமாற்றத்துடன் தொடங்கியது. ஜெய்ஸ்வால் 21 ரங்களில் ஆட்டம் இழந்தார். கவர் திசையில் மேல் நோக்கி அடித்து விக்கெட்டை இழந்தார். பட்லர் 21 (25) ரன்களில் ஆட்டமிழந்தார். பைன் லெக் திசையில் அடித்து கேட்ச் ஆனார். முதல் 10 ஓவரில் 60 ரன்கள் எடுத்து 2 ஒப்பனர்களும் அவுட் ஆகினர்.
பின்னர் இணைந்த சஞ்சு மற்றும் பராக் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். பராக் அவ்வப்போது பௌண்டரி அடித்தார். சஞ்சு சாம்சன் 15 (19) ரன்களில் சிம்ரஜித் பந்தில் ருதுராஜிடம் கேட்ச் ஆனார். பின்னர் ஜூரல் களம் கண்டார் . அந்த அணி 15 ஓவர்கள் முடிவில் 93 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறி வந்தது.
மதுரை அரசு அருங்காட்சியகத்தில் தாயம் விளையாட்டு போட்டி ! நாளை திங்கட்கிழமை நடைபெறுவதாக அறிவிப்பு !
16 மற்றும் 17வது ஓவர்களில் நிதானமாக ஆடினார்கள். ஆமை வேகத்தில் ஸ்கோர் உயர்ந்தது. 18ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் உட்பட 12 ரன்கள் கிடைத்தது. 19வது ஓவரை ஷரத்துள் வீசினர். அதில் 7 ரன்களை எடுக்க முடிந்தது. கைவசம் 7 விக்கெட் இருந்தாலும் ராஜஸ்தானால் இன்று அதிரடியாக ஆட முடியவில்லை.
கடைசி ஓவரை தேஷ்பாண்டை வீசினர். முதல் பந்தில் ஜூரல் அவுட் ஆனார். 18 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த துபை டக் அவுட் ஆகி வெளியேறினார். 3 வது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. 5வது பந்தில் பராக் சூப்பர் சிக்ஸர் அடித்தார்.
20 ஓவர் முழுவதும் ஆடிய ராஜஸதன் அணி 5 விக்கெட் இழந்து 141 ரன்களை அடித்தது. சென்னை வெற்றி பெற 142 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.