பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம் - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம்: சினிமா பிரபலங்கள் போல தற்போது சின்னத்திரை பிரபலங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு சின்னத்திரையில்  மக்களை கவர்வதற்கு பல டிவி சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரின் தெலுங்கு ரீமேக்கான Trinayani என்ற தொடரில் நடித்து வருபவர் தான் பவித்ரா ஜெயராம். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்  ரோபோ பேமிலி என்கிற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.

இப்படி பிசியான நடிகையாக இருந்து வந்த அவர்,  நேற்று ஆந்திராவில் காரில் தனது குடும்பத்துடன் பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பில் மோதிய நிலையில், உடனே பின்னால் வந்த பஸ்ஸுடனும் மோதியுள்ளது. இந்த விபத்தில் சின்னத்திரை நடிகை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் சேர்ந்து வந்த சில நபர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. தற்போது அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகின்றனர். அவர் உயிரிழந்த சம்பவம் தெலுங்கு மற்றும் கன்னட சின்னத்திரை உலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று நடிகை குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 14ம் தேதி வெளியீடு ! 10ஆம் வகுப்பு துணைத்தேர்விற்குமே16 முதல் விண்ணப்பம் – அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *