Andhra Assembly Elections 2024: வாக்கு இயந்திரங்கள் உடைப்பு: மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் சேர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்தும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜன சேனா, பாஜக ஆகிய கட்சிகளின் கூட்டணியாக சேர்ந்து போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடக்கும் வாக்குப்பதிவு சாவடிகளில் பல மோதல்கள் நடைபெற்று வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது ரெண்டல என்ற கிராமத்தின் வாக்குச்சாவடியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் கட்டையால் அடித்து தாக்கிக் கொண்டனர். பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடகர் வேல்முருகன் திடீர் கைது – என்ன காரணம் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
குறிப்பாக இந்த மோதலில் இடையில் சித்தூர் மாவட்டத்தின் புங்கனூர் என்ற பகுதியில் 15 க்கும் மேற்பட்ட தங்கள் கட்சியின் வாக்கு சாவடி அதிகாரிகள் கடத்தப்பட்டுள்ளதாக தெலுங்கு கட்சியினர் புகார் அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி புல்லாம்பேட் மண்டல் தலாய் பள்ளியில் உள்ள ஒரு சாவடியில் சிலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கீழே போட்டு உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் மோதல்களை கட்டுக்குள் கொண்டு வர பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்றைய சமீபத்திய செய்திகள்:
பொறியியல் படிப்புக்காக ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று (மே 13) கனமழைக்கு வாய்ப்பு
பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் மரணம்